புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மது போதையில் இருந்த இளைஞர்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒத்தக்கடை பகுதிக்கு வருகை தந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மது போதையில் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் பேனர்களை அடித்து நொறுக்கினர்.
பின்னர் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மது போதை இளைஞர்கள் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்