மேட்டுப்பாளையம் – நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நீலகிரி மலை ரயில் பாதையில் விவின் கிரீஸ் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸாக வெளியிட்டார்.
இந்த வீடியோ வெளியான நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சாகசம் செய்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இனி யாரும் இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.