பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9 ஆயிரத்து 100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது.
உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.