அமெரிக்காவுக்குப் பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரிப் பாகங்கள் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்குப் பதிலடியாக, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, சுமார் 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.