சென்னை நந்தம்பாக்கத்தில் விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி குஞ்சம்மாள் தாமஸ். இவர் நந்தம்பாக்கம் துளசிங்கபுரம் மெயின் ரோடு அருகே மூவாயிரத்து 140 சதுர அடி நிலத்தை வங்கிக்கடன் மூலம் 2014ம் ஆண்டு வாங்கியிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக முதியோர் இல்லம் நடத்திவரும் குஞ்சம்மாள், தனது சொந்த நிலத்தில் முதியோர் இல்லம் கட்டுவதற்காக நில அளவீடு பணியை அண்மையில் மேற்கொண்டார்.
அப்போது நிலத்தை அபகரிக்க முயன்றதாக திமுக, விசிக நிர்வாகிகள் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவசர அவசரமாகத் தனது நிலத்தில் விசிக நிர்வாகிகள் கட்சி அலுவலகம் கட்டியதால் மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.