பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது மனைவி புதிய கட்சியை அறிமுகம் செய்துவைத்தார்.
ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொத்தூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நினைவிடத்திற்குப் பேரணியாக வந்த அவரது மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் எனும் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். கட்சிக்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து சமூகத்தையும் நேசிக்கும் தலைவராக ஆம்ஸ்ட்ராங் திகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
அவரது தியாகம், உழைப்பு காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் பாஜக பங்கேற்று இருப்பதாகவும் கூறினார்.