மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மராத்தி கற்க முடியாது என்று பேசியவரின் நிறுவனம் சூறையாடப்பட்டுள்ளது.
பிரபல முதலீட்டாளரான சுஷில் கேடியா, ராஜ் தாக்கரேவுக்கு சவால் விடுத்து, தான் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாகக் கூறினார்.
இதனைக் கண்டித்து மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சுஷில் கேடியாவின் அலுவலகத்தை ராஜ் தாக்ரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் சூறையாடி உள்ளனர்.