ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 700 கோடி ரூபாய் அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தைச் சந்தித்துள்ளன.
பருவமழை தொடங்கியதில் இருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன், அரசு துணை நிற்பதாக முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.