உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் ஹோண்டா ஷோரூமின் இரும்பு கதவு விழுந்து காவலாளி உயிரிழந்தார்.
மொரதாபாத்தின் ராம்பூர் பகுதியில் உள்ள ஹோண்டா ஷோரூமில் பணியாற்றி வந்த காவலாளி ஷோரூமின் பிரதான வாயிலில் உள்ள இரும்பு கதவை மூடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாகக் கதவு காவலாளியின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.