பிரபல யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி வரதட்சணை புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடியூப் சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுதர்சன். இவர் மருத்துவரான விமலாதேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சுதர்சன் சொந்த வீடு கட்டிவந்ததாகவும், அதற்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் மனைவியிடம் 20 சவரன் நகை கேட்டு சுதர்சன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விமலா தேவி வரதட்சணை புகாரளித்துள்ளார்.
இதன்பேரில் சுதர்சன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.