ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் பகுதா யாத்திரை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக 3 பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெகநாதர் தேரில் வெள்ளை நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், பாலபத்திரர் தேரில் கருப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், சுபத்ரா எழுந்தருளும் தேரில் சிவப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
முதலில் பாலபத்திரர் தேரும், பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும், இறுதியாக ஜெகநாதரின் தேரும் புறப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் இழுத்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த ரதயாத்திரையானது, பூரி ஜெகந்நாதர் கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மவுசிமா கோயில் மற்றும் குண்டிச்சா கோயில் வரை நடைபெறும். இந்நிலையில் ஜெகந்நாதர் கோயிலில் இருந்து புறப்பட்ட 3 தேர்கள் குண்டிச்சா கோயிலை வந்தடைந்தது.
இதையடுத்து மீண்டும் புரி கோயிலுக்குத் தேர்கள் திரும்பும் உற்சவம் பகுதா யாத்திரை என்று அழைக்கப்பட்டுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுங்கிலும் ஆடி, பாடி உற்சாகமடைந்தனர்.