காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகளத்தூரில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியின் டயர் வெடித்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். காயமடைந்த ஓட்டுநர் சூர்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்த பெட்ரோல் டேங்கர் லாரியை ராட்சத கிரேன்களை கொண்டு அப்புறப்படுத்தினர்.
பெட்ரோல், டீசல் நெடியை போக்க ரசாயனம் கலந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் தெளித்து தீவிபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்தனர்.