ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள், அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் புகுந்த சிறுத்தை, கால்நடைகளை வேட்டையாடியது சிசிடிவி கேமராமவில் பதிவாகியிருந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.