திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 10ஆம் கால யாகசாலை பூஜை விமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர், பார்வதி, கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ராஜ கோபுர அடிவாரத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில், கடந்த 1ஆம் தேதி முதல், யாகசாலை பூஜைகள் தொடங்கின. 76 யாக குண்டங்கள், 700 கும்பங்களுடன் நாள்தோறும் காலை, மாலை என யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 10ஆம் கால யாகசாலை பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 108 ஓதுவார்கள் வேத பாராயணங்களை ஓதி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.