இஸ்ரேல் உடனான போருக்குப் பிறகு ஈரான் உச்ச தலைவர் கமேனி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு ஆதரவு அளித்ததாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. 12 நாட்கள் நடைபெற்ற இந்தப் போர், கடந்த 24ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் போரின்போது தலைமறைவாக இருந்த ஈரான் உச்ச தலைவர் கமேனி, தற்போது பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
டெக்ரானில் நடைபெற்ற மொஹரம் பண்டிகை நிகழ்வில் அவர் பங்கேற்றார். அப்போது கமேனியை வாழ்த்தி பொதுமக்கள் உற்சாகத்துடன் முழக்கம் எழுப்பினர்.