நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுரம்பட்டியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் இருவர் இறந்து கிடந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, இறந்து கிடந்தது திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியும் ஆசிரியருமான பிரமிளா என்பது தெரியவந்தது.
கடன் பிரச்னை அல்லது குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.