தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு, முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க சில நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கடந்த சில தினங்களாக போதிய மழை இல்லாத நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.