சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குழந்தை உட்பட 8 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
பெரியார் நகர், சமஸ்கான் பள்ளிவாசல் பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சஷ்டிகா என்ற 3 வயது சிறுமியையும்,
நிதிராஜ் என்ற 4 வயது சிறுவனையும் தெருநாய் கடித்தது. அலறல் சத்ததை கேட்ட பொதுமக்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே, முதியவர் உட்பட மேலும் 6 பேரை அந்த வெறி நாய் கடித்தது. இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வெறிநாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.