தனது 90-வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் 14-வது புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 1.4 பில்லியன் இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அன்பு, இரக்கம், பொறுமையின் அடையாளமாக இருந்து வருகிறார்.
அவரது செய்தி அனைத்து மதங்களிலும் மரியாதை மற்றும் போற்றுதலைத் தூண்டியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற தனது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தலாய் லாமா பங்கேற்றார்.
இதில் உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு ரசித்தனர்.