ஹிமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற 14-ஆவது புத்த மத தலைவரான தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தலாய் லாமா, பண்டைய ஞானத்திற்கும், நவீன உலகத்திற்கும் இடையிலான ஒரு உயிருள்ள பாலம் என்று அவர் புகழாரம் சூட்டினார். தலாய் லாமா இந்தியாவை தனது ஆர்யபூமி என கருதுவதாகவும், அவர் இந்தியாவில் இருப்பதைக் கண்டு ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.