பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதம், தேசியம், நாகரிகம் அல்லது இனக்குழுவுடன் பயங்கரவாதத்தை இணைக்கக்கூடாது எனவும் அதனை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாட்டை நிராகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கேனலை
பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினார். இதேபோல் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிமையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார்…