திருவிடைமருதூரில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் உலக சாதனை நாட்டிய பெருவிழா நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய மாணவ, மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக பரதநாட்டியம் ஆடியதை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு மெய்சிலிர்த்தனர். தொடர்ந்து பரதம் ஆடிய மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.