மதுரை அரசு மருத்துவமனையில் கால் வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவரது சகோதரர் நவீன் குமாரும் காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் காலில் மிகுந்த வலி ஏற்பட்டதாக கூறி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்ததை அடுத்து நவீன்குமார் வீடு திரும்பினார்.