ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்களாக கடும்போர் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக ஈரானில் தமிழக மீனவர்கள் சிக்கித் தவித்து வந்தனர்.
இந்நிலையில் ஈரானில் பந்தர் இ.சிறுயியா (Bandar-e-Chiruiyeh) மற்றும் கிஷ் (kish) தீவில், தென் தமிழகத்தைச் சேர்ந்த 15 இந்திய மீனவர்கள் சிக்குண்டனர்.
அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதினார்.
தமிழக பாஜக-வின் சீரிய முன்னெடுப்பிலும் பயணச் செலவிலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை சால்வை அணிவித்து நயினார் நாகேந்திரன் வரவேற்றார். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.