இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்கம்மில் நடைபெற்றது.
இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் 2- வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததன் மூலம், இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிய அந்த அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. போட்டியின் இறுதி நாளில் இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.