2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் எம்.பி ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், மாபெரும் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையர்களின் பொருளாதாரத்தை உடைத்தவர் என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் என்றும், நெல்லையில் வஉசிக்கு மணி மண்டபம், முழு உருவ சிலையை தான் அமைச்சராக இருந்த போது அமைத்ததாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.