இந்தி மொழியை சிவசேனா எதிர்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றினர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இந்தி எதிர்ப்பு உரிமைப்போர் மகாராஷ்டிராவில் சூறாவளியாக சுழன்று அடிக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தொடக்கப்பள்ளியில் இந்தி கட்டாயம் என்பதை மட்டும்தான் தாங்கள் எதிர்ப்பதாக விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் இந்தி மொழியையே எதிர்க்கவில்லை எனவும், தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கும், தங்களின் நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.