மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தொடர் கனமழை காரணமாகக் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாசிக் நகரில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. கங்காப்பூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோதாவரி ஆற்றின நீர்மட்டம் அதிகரித்தது.
இந்நிலையில், பஞ்சவதியில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோரம் உள்ள கோயில்களில் வெள்ள நீர் புகுந்தது.