அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், ட்ரம்ப் அரசு வழங்கிய பதவியைத் துறந்து, ட்ரம்புக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வந்தார். ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய எலான் மஸ்க், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார்.
அதன்படி, America Party என்ற பெயரில் புதிய கட்சியை மஸ்க் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.