இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷான் நிகம் நடிப்பில் உருவாகும் பல்டி திரைப்படத்துக்கு அவர் இசையமைக்கவுள்ளார்.
இதனையொட்டி, நடிகர் மோகன்லால், சாய் அபயங்கரை மலையாள சினிமாவிற்கு வரவேற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கட்சி சேர, ஆச கூட போன்ற ஆல்பங்களுக்கு இசையமைத்ததன் மூலம் புகழ் பெற்ற சாய் அபயங்கர் தமிழிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.