நடிகை அனுஷ்கா நடித்த காதி திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்தின் ரிலீசை படக்குழு ஒத்தி வைத்தது.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் இடம்பெற்ற சைலோரே பாடலை படக்குழு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
இப்படத்தின் போஸ்டர் வெளியாகி அனுஷ்காவின் கதாப்பாத்திரம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
காதி படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.