உத்தரப்பிரதேசத்தில் மொஹரத்தை ஒட்டி ஊர்வலம் சென்ற இஸ்லாமியர்கள் தாசியா எனப்படும் கல்லறை மாதிரியை சரயு நதியில் விட்டனர்.
ஷியா பிரிவினர் துக்க நாளாக அனுசரிக்கும் மொஹரம் பண்டிகையை ஒட்டி, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக அயோத்தியில் நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, மொஹரம் தாசியா ஆற்றில் விடப்பட்டது.