லக்கி பாஸ்கர் படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.
லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது. தற்போது வெங்கி அட்லூரி சூர்யாவின் 46வது திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
அந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த பின்னர் லக்கி பாஸ்கர் படத்தின் 2-ம் பாகம் உருவாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.