சேலத்தில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி 15க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை பெற்றதாகத் தெரிகிறது.
ஆனால் பணத்தைத் திருப்பி தராத நிலையில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ராஜேஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.