மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் அருகேயுள்ள சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெருஞ்சேரி கிராமத்தில் 54 அடி உயரச் சிவன் கோயில் உள்ளது. கடந்த நான்காம் தேதி வீரசோழன் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைத்து வேள்விகள் நடைபெற்றன.
இதனைதொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவவாத்தியங்கள் முழங்கப் புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.