குட்நைட் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற மணிகண்டன், மக்கள் காவலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இயக்குகிறார். படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.