தாம்பரம் அருகே நில பிரச்சனை தொடர்பாகப் புகாரளித்தால் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ள நிலையில், அவர் வேறொரு பெண்ணோடு வசித்து வந்தார்.
அண்மையில் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்த நிலையில், அவரின் 2வது மனைவி திமுக மாமன்ற உறுப்பினரின் உதவியோடு சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் சித்ரா புகாரளித்த நிலையில், விசாரணை நடத்த வேண்டிய காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையம் முன்பு சித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.