சர்வதேச விமானநிலைய கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய அளவில் பயணிகளைக் கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்கு ஒருமுறை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவரிசை பட்டியலைச் சர்வதேச விமானநிலைய கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதில், திருச்சி விமான நிலையம் 4 புள்ளி 94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளது. 4 புள்ளி 92 புள்ளிகளுடன் கோவா, கொல்கத்தா, இந்தூர், புனே விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.