கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு இன்று முதல் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார்.
மூணாறு போதமேட்டு பகுதியில் கடந்த வாரம் இளைஞர்கள் சிலர் ஜீப் சவாரி மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இடுக்கியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி ஜீப் சவாரி மற்றும் ஆஃப் ரோடு உள்ளிட்ட பயணங்களை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் வாகனங்கள் செல்லும் பாதைகளை ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.