தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மணல் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் மணல் லாரிகளால் அதிகளவு தூசி ஏற்படுவதாகத் தெரிவித்த பொதுமக்கள், இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
மேலும், மனு அளித்தபோது வராத அதிகாரிகள், லாரி சிறைபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக வருகை தந்ததாக விமர்சித்தனர்.