பெரம்பலூர் அருகே சக பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நபர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பொய்யான புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.