திருவாரூர் அருகே கந்துவட்டி விவகாரத்தில் தாக்கப்பட்ட நபர் அளித்த புகாரை வாபஸ் பெற காவல் ஆய்வாளர் வலுயுறுத்தியதால் பாதிக்கப்பட்ட நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரளம் அடுத்த சிறுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலு, சுப்ரமணியம் என்பவரிடம் வட்டிக்கு 60 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 35 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பி செலுத்திய நிலையில், மீதி பணத்தைக் கேட்டு சுப்ரமணியம் உள்ளிட்ட 8 பேர் சிங்காரவேலுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பேரளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகாரளித்த நிலையில், அதனைத் திரும்பப் பெறுமாறு காவல் ஆய்வாளர் சுகுணா மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சிங்காரவேலு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காரவேலுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.