நடிகர் விஷ்ணு விஷாலின் மகளுக்கு மிரா என நடிகர் அமீர்கான் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2021ம் ஆண்டு ஜுவாலா குட்டா என்ற பேட்மிண்டன் வீராங்கனையைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் – ஜுவாலா குட்டா தம்பதியின் பெண் குழந்தைக்கு மிரா என நடிகர் அமீர்கான் பெயர் சூட்டினார்.
மகளுக்கு மிரா என அமீர்கான் பெயர் சூட்டியதை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.