ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 4 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்தக் கோயில் நிர்வாகத்தினர் முடிவுசெய்தனர்.
இதையடுத்து 3 நாட்களாக நடந்த யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.