பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள ரிஷப்ஷெட்டியின் காந்தாரா 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடத்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து 2ம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தாரா 2ம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
















