ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சோளிங்கர் நகரில் 406 படிக்கட்டுகளைக் கொண்ட சின்னமலை என அழைக்கப்படும் யோக ஆஞ்சநேயர் சன்னிதானம் அமைந்துள்ளது.
இங்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகளாகப் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இதனைத் தொடர்ந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.