2026-ம் ஆண்டில் பாதுகாப்புத்துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்தியா இலக்கு வைத்துள்ளது என பாதுகாப்புத்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு செலவினத்தில் 75 சதவீதம் இப்போது உள்நாட்டிலேயே செலவிடப்படும் என்றும், அவற்றில் பல திட்டங்கள் டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமான திட்டத்தின் பணிகள் முன்னேறி வருவதாகவும் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.