எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கில்லர் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வில்லன் கேரக்டர்களில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யா, 10 ஆண்டுக்கு முன் இசை என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் கில்லர் எனும் படத்தை இயக்கும் எஸ்.ஜே. சூர்யா, அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்ட போஸ்டரில் “நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம். நாம் தொட்டது எதுவும் அமையும். இது அன்பால் இணைந்த இதயம்” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.