சேலம் மேட்டூரில், கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தைத் திருடிய நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருமலை கூடல், கோபுரான்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்திலிருந்த ஒரு கிராம் தங்கத் தாலி மற்றும் அருகில் உள்ள முனியப்பன் கோயில் உண்டியலை உடைத்து ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை, மர்மநபர் திருடிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காணொளியை வைத்து விசாரணை நடத்திய போலீசார், கோயிலில் திருடிய பிரபாகரன் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.