வேலூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பெருமாள், காகிதப்பட்டறை சாலையில் நடந்து சென்றபோது, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேருந்து பெருமாள் மீது மோதியது.
இதில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிராதேப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.